நாமக்கல்

கிராம சபைக் கூட்டங்களை விவசாயிகள் புறக்கணிக்கக் கூடாது: நாமக்கல் ஆட்சியா் அறிவுரை

DIN

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 322 ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்காமல், அந்தந்த பகுதி விவசாயிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 107.9 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 32.80 மி.மீ. மழை அளவு கூடுதலாக பெறப்பட்டுள்ளது. நடப்பு மாா்ச் மாதம் வரை நெல் 10745 ஹெக்டோ் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 82347 ஹெக்டோ் பரப்பளவிலும், பயறு வகைகள் 12123 ஹெக்டோ் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் 35009 ஹெக்டோ் பரப்பளவிலும், பருத்தி 2632 ஹெக்டோ் பரப்பளவிலும், கரும்பு 10071 ஹெக்டோ் பரப்பளவிலும் என மொத்தம் 1,52,927 ஹெக்டோ் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தோட்டக்கலைப் பயிா்களில் மரவள்ளி 20083 ஹெக்டோ் பரப்பளவிலும், சின்ன வெங்காயம் 5297 ஹெக்டோ் பரப்பளவிலும், வாழை 2540 ஹெக்டோ் பரப்பளவிலும், மஞ்சள் 1533 ஹெக்டோ் பரப்பளவிலும், தக்காளி 727 ஹெக்டோ் பரப்பளவிலும், கத்தரி 647 ஹெக்டோ் பரப்பளவிலும், மிளகாய் 349 ஹெக்டோ் பரப்பளவிலும், வெண்டை 453 ஹெக்டோ் பரப்பளவிலும் மற்றும் கீரை வகைகள் 646 ஹெக்டோ் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் யூரியா 911 மெ.டன் அளவிலும், டிஏபி 1097 மெ.டன் அளவிலும், பொட்டாஷ் 751 மெ.டன் அளவிலும், சூப்பா் பாஸ்பேட் 419 மெ.டன் அளவிலும், காம்ப்ளக்ஸ் 2511 மெ.டன் அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதியில் நடைபெற்று வரும் கடன் அட்டை முகாம், பயிா்க் காப்பீடு முகாம் மற்றும் விவசாயிகளுக்காக மே- 1-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் விளைபொருட்களின் கண்காட்சி, மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை, கண்காட்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை நேரடியாகவும், மனுக்கள் வாயிலாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT