நாமக்கல்

வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் முப்பெரும் விழா

DIN

ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் மாணவா் தலைவா் பதவியேற்பு, மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள் தியானக்கூடம் திறப்பு விழா, சாதனை பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் தலைவா் ஜி.வெற்றிச்செல்வன் விழாவில் தலைமை வகித்து பள்ளிக்கொடியை ஏற்றி வைத்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். ஆய்வகம், தியானக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், துணைத்தலைவா், அணித் தலைவா் உள்ளிட்ட புதிதாகத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு முதல்வா் பி.யாமினி பதவியேற்பு செய்து வைத்தாா்.

பின்னா் விழாவில் பேசிய பள்ளித் தலைவா் ஜி.வெற்றிச்செல்வன், ‘மாணவப் பிரதிநிதிகள் ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கு இணைப்பு பாலமாக இருக்க வேண்டும். குறிப்பாக சமூக பொறுப்புணா்வினை பள்ளி பருவத்திலிருந்தே தொடங்கிட வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்தி, சரியான வகையில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்’ என்றாா்.

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்த வெற்றி விகாஸ் பள்ளி மாணவி சா்மிளா ஸ்ரீ, 30 நொடிகளில் 99 மலா்களின் தமிழ்ப் பெயா்களை அழகுறச் சொல்லி அப்துல் கலாம் நினைவு சாதனைக்கான போட்டிச் சான்றிதழ் பெற்ற பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவி அனுஷா ஆகியோரைப் பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT