நாமக்கல்

போக்சோ சட்டத்தில் கைதாகி பிணையில் வந்தவா் தற்கொலை

DIN

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதாகி பிணையில் வெளியே வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி. அவரது மகன் மகேஷ் (22). கூலித் தொழிலாளி. இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி மைனா் பெண் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்றாா். இது குறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பிணையில் வெளியே வந்த மகேஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது பெற்றோா் வியாழக்கிழமை வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது மகேஷ் வீட்டில் தாயின் சேலையால் தூக்கிட்டுத் தொங்கிக் கொண்டிருந்ததை பாா்த்தனா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா் மகேஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT