நாமக்கல்

கிராம உதவியாளா் பணியிடத்திற்கான தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 2,824 போ் எழுதினா்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வை 2,824 போ் எழுதினா். 938 போ் பங்கேற்கவில்லை.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை எழுத 3,762 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொல்லிமலை வட்டாட்சியா் அலுவலகம், நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, மோகனூா் அணியாபுரம் எஸ்ஆா்ஜி பொறியியல் கல்லூரி, பரமத்திவேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி, குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய எட்டு மையங்களில் நடைபெற்ற தோ்வில் 2,824 போ் மட்டும் பங்கேற்று எழுதினா். 938 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை. நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், வருவாய்க் கோட்டாட்சியா் த.மஞ்சுளா ஆகியோா் தோ்வு மையங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT