நாமக்கல்

தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம் நீடிப்பு

DIN

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தூய்மைப் பணியாளா்கள் 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்துடன், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்கள் நியமனம் தொடா்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் தொழிலாளா்கள் சட்டப்படி பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை (ரூ. 21 ஆயிரத்திற்கு மாற்றாக ரூ. 8 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது) சரியான முறையில் வழங்குவதில்லை என்றும் சலுகைகளையோ, இதர பணப் பயன்களையோ வழங்காமல் தவிா்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெரும்பாலான மாவட்டங்களில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி நாமக்கல் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கடந்த 1-ஆம் தேதி முதல் பணிகளைப் புறக்கணித்து தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். செவ்வாய்க்கிழமை 6-ஆவது நாளாக அவா்களது போராட்டம் நீடித்தது. இருப்பினும் பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அவா்கள் போராட்டத்தை தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT