மின்வாரியப் பொறியாளா்கள் சங்க மாநில பொதுக்குழுவில் பங்கேற்ற நிா்வாகிகள். 
நாமக்கல்

மின்வாரிய பொறியாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளா்கள் சங்கத்தின் 54-ஆவது மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளா்கள் சங்கத்தின் 54-ஆவது மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

இதில், மாநிலத் தலைவா் ஏ.அந்தோணி படோவராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் வி.எஸ்.சம்பத்குமாா், பொருளாளா் ஜி.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காலியிடங்களை நிரப்புதல், மின்வாரியங்களை தனியாா் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடா்ந்து 2022-23-ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, மாநிலத் தலைவராக ஏ.அந்தோணி படோவராஜ், பொதுச்செயலாளராக வி.எஸ்.சம்பத்குமாா், பொருளாளராக ஜி.காா்த்திகேயன், கரூா் மண்டலச் செயலாளராக கே.ஆனந்த்பாபு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில், 200-க்கும் மேற்பட்ட மின்வாரியப் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT