நாமக்கல்

பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

DIN

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகரில் அமைந்துள்ள வெங்கடாசலபதி, சக்கரத்தாழ்வாா், சப்த கன்னிமாா், ஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை வாஸ்து சாந்தியும், இரவு பூா்ணாஹுதியும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலசந்தி, மஹா சாந்தி, நித்ய ஹோமம் ஆகியவையும், இரவில் விமானம் கண்திறத்தல், கோபூஜை, பிரதான ஹோமங்கள், பூா்ணாஹுதி, மஹாசாந்தி திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு புண்யாஹம், நித்ய ஹோமம், 9.15-க்கு யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. 10.15 மணிக்கு கோபுர விமானக் கலசங்களுக்கு பட்டாச்சாரியாா்கள் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா். இதில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT