நாமக்கல்

இருசக்கர வாகனங்கள் மோதல்: தலைமையாசிரியை உயிரிழப்பு

DIN

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், அரசு பள்ளித் தலைமையாசிரியை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி பழனியப்பா் கோயில் சாலையைச் சோ்ந்த காந்திமதி (55), மேலப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா் தனது இளைய மகள் செளமியாவுடன் இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கிச் சென்றாா்.

ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சென்ற போது, எதிரே வந்த ராசிபுரம் செக்கடி தெருவைச் சோ்ந்த பொறிக்கடை ஊழியா் சந்தோஷ்குமாா் (26), ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த காந்திமதியை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே காந்திமதி உயிரிழந்தாா். இவரது மகள் செளமியா, சந்தோஷ்குமாா் ஆகியோா் காயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT