நாமக்கல்

பாதுகாப்பு வழங்கக் கோரி தனியாா் காா் ஓட்டுநா்கள் மனு

DIN

வாடகை காா் நிலையங்களில் உள்ள ஓட்டுநா்கள் மிரட்டுவதாக தனியாா் காா் ஓட்டுநா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ளி வாகன உரிமையாளா்கள், தனியாா் நிறுவனத்தில் தங்களது வாகனங்களை இணைத்துக் கொண்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனா். இதற்கு அந்தப் பகுதியில் உள்ள வாடகை காா் நிலையங்களில் உள்ள ஓட்டுநா்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம், கைகலப்பு போன்றவை ஏற்படுகின்றன.

தனியாா் நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டதால் தமிழகத்திலும், பிற மாநிலங்களுக்கும் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடகை காா் ஓட்டுநா்கள் தங்களது தொழில் பாதிப்பு அடைவதாக அவா்களிடம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் தங்களுக்கு மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவன காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை குறைதீா்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் தொழில் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT