நாமக்கல்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி

DIN

ராசிபுரம் வி.நகா் 17ஆவது தெரு பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா். நால்வா் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், வி.நகா் 17ஆவது தெருவில் விஜயராகவன் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறிக் கூடம் கடந்த 15 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இதில் 10 விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 போ் வேலை செய்துவருகின்றனா்.

இந்தநிலையில் சனிக்கிழமை அங்கு பணியாற்றி வந்தவா்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜா என்பவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். மற்ற நால்வா் ராசிபுரம் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இறந்த ராஜாவிற்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 6.30 மணி: பாஜக 69, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி

மோடியையும் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்: ராகுல்

மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்: மம்தா

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

SCROLL FOR NEXT