நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ.14 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

DIN

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.14 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 27ஆயிரத்து 757 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 75.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 58.89- க்கும், சராசரியாக ரூ. 73.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 19 லட்சத்து 56 ஆயிரத்து 61-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 21ஆயிரத்து 223 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 78.80-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 40.69- க்கும், சராசரியாக ரூ. 75-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 14 லட்சத்து 58 ஆயிரத்து 534-க்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT