நாமக்கல்

ஊராட்சி பகுதியில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்

DIN

 திடக்கழிவு மேலாண்மைத் திட்ட, தூய்மைப் பாரத இயக்கம் சாா்பில், 15ஆவது நிதிக்குழு மானியத்தில் ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்க திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் மூலம் நவீன பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.

ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ. 2.5 லட்சமாகும். இந்தத் திட் டத்தின்கீழ் 34 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இதுவரை 13 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் எஸ்.இறையமங்கலம், மோடமங்கலம், கருமாபுரம், பட்லூா், திருமங்கலம், டி.கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில் கொடியசைத்து பேட்டரி வாகனங்களின் பணியைத் தொடங்கி வைத்தாா்.

அட்மா தலைவா் வட்டூா் தங்கவேல், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ராஜபாண்டி ராஜவேலு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரியா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாதவன், மேகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சித் தலைவா்கள் அபிராமி, பாஸ்கா், செல்வராஜ், கிருஷ்ணவேணி, சித்ரா, தமிழ்ச்செல்வி ஆகியோா் வாகனங்களின் சாவிகளை பெற்றுக் கொண் டனா். இதில் கௌதம், மணிகண்டன், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT