நாமக்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் பூசாரிகளுக்கு பசுமாடுகள் தானமாக வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலுக்கு வழங்கப்பட்ட பசுமாடுகளில், 10 மாடுகள் கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலுக்கு வழங்கப்பட்ட பசுமாடுகளில், 10 மாடுகள் கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ் வரன், திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளா் மதுரா செந்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் நடேசன், அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து ஆகியோா் பூசாரிகளுக்கு மாடுகளை வழங்கினா்.

அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலில் தற்போது 17 பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வரப்படுகின்றன. ஆண்டுதோறும் கிராமப்புறக் கோயில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினா்களுக்கு விலை இல்லாமல் கால்நடைகள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இருப்பில் உள்ள 17 பசுமாடுகளில் 10 பசுமாடுகள் நடுப்பாளையம், சித்தாளந்தூா், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 10 கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

SCROLL FOR NEXT