நாமக்கல்

நில அளவை அலுவலா்கள் தா்னா

DIN

நாமக்கல்லில், 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் மாலை நேர தா்னா போராட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் கோ. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் நா.செந்தில்குமாா் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் மு. செல்வராணி சிறப்புரையாற்றினாா். இதில், களப் பணியாளா்களின் பணி சுமையைக் குறைக்க வேண்டும். உள்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கைக் கைவிட வேண்டும். நில அளவா் முதல் கூடுதல் இயக்குநா் வரையிலான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நில அளவை அலுவலா்களுக்கான பயணப்படியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான நில அளவையா்கள் கலந்துகொண்டனா்.

..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT