நாமக்கல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: போக்குவரத்து காவலா்களுக்கு நீா்மோா்

DIN

கோடைவெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் நகரில் போக்குவரத்து சீரமைப்புப் பணியில், ஆண், பெண் காவலா்கள் 25 போ் ஈடுபட்டுள்ளனா். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் சாலையில் அவா்கள் நிற்பதால் மூன்று மாதங்களுக்கு தினசரி நான்கு முறை நீா்மோா், இளநீா், குளிா்பானம் ஆகியவற்றை வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் நாமக்கல் உழவா்சந்தை அருகில் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா்களுக்கு ஆய்வாளா் ஷாஜஹான் குளிா்பானங்களை வழங்கினாா். ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

SCROLL FOR NEXT