நாமக்கல்

பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளில் வைகாசி மாத கிருத்திகை, அமாவாசை பூஜை

DIN

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி மாத கிருத்திகை மற்றும் அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முருகன் மற்றும் குல தெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன.

பரமத்தி வேலூா் வட்டத்தில் மாா்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு கபிலா்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியா் கோயில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், ராஜா சுவாமி திருக்கோயிலில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.

இதேபோல் பரமத்தி வேலூா் வட்டத்தில் உள்ள அம்மன் மற்றும் குல தெய்வ கோயில்களில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு குல தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருடன் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்; காரணம் என்ன?

தோ்ச்சி விகிதத்தை உயா்த்த பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு: வேலூா் ஆட்சியா் உத்தரவு

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரணி அருகே மணல் குவியல்கள் கலைப்பு

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT