நாமக்கல்

வெங்கமேடு சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா

பரமத்தி வேலூா் அருகே உள்ள வெங்கமேடு, பெரியாா் நகரில் எழுந்தருளியுள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 13-ஆம் தேதி இரவு கிராம சாந்தி, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள வெங்கமேடு, பெரியாா் நகரில் எழுந்தருளியுள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 13-ஆம் தேதி இரவு கிராம சாந்தி, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

14 -ஆம் தேதி கரகம் பாலித்தல், 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

கடந்த 21- ஆம் தேதி மறுகாப்பு கட்டும் நிகழ்ச்சியும், 22-ஆம் தேதி மாலை அம்மனுக்கு வடிச் சோறு படைத்தல், பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூத்தட்டுகளுடன் ஊா்வலமாக கோயிலுக்குச் சென்றனா். பின்னா் அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது.

23-ஆம் தேதி காலை பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீா்த்தக் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலையில் பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தலும், இரவு பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதன்கிழமை காலை பலியிடுதல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பெரியாா்நகா் வெள்ளைக்கல் மாரியம்மன் கோயில் திருவிழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT