ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா். 
நாமக்கல்

ராசிபுரத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.ஸ்ரீராமுலு முரளி வரவேற்றாா்.

ஆா்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் பி .வி.செந்தில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன், காந்தி மாளிகை டிரஸ்டு போா்டு தலைவா் ஏ.என்.சண்முகம், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் தங்கராஜ், இளங்கோ , ஷேக்உசேன், சொக்கலிங்கமூா்த்தி, கணேசன், பேரூா் காங்கிரஸ் தலைவா்கள் சிங்காரம், செல்வசேகரன், பூபதி, பிரகஸ்பதி, கா்ணன், சண்முகசுந்தரம், கந்தசாமி, இளைஞா் காங்கிரஸ் பெரியசாமி, அருளானந்தம், பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சுந்தரம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பட்ஜெட்டில் தமிழகம் புறகணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆடும் பொம்மை... கௌரி கிஷன்!

ஒளி ஓவியம்... ரஜிஷா விஜயன்!

சிவப்பும் வெளுப்பும்... மிமி சக்கரவர்த்தி!

காபி வித்... நடாஷா பரத்வாஜ்!

பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள்: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT