பசு மற்றும் கன்றுகளுடன் கந்தசாமி - உண்ணாமலை தம்பதி.  Din
நாமக்கல்

திருச்செங்கோடு: ஒரே நேரத்தில் 2 கன்றுகள் ஈன்ற பசு!

ஒரே நேரத்தில் 2 கன்றுகள் ஈன்ற பசு தொடர்பாக...

DIN

திருச்செங்கோடு அருகே ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை பசு ஈன்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம், காசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி - உண்ணாமலை தம்பதியினர்.

இவர்கள் தங்கள் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில், சினையுற்றிருந்த ஒரு கலப்பின பசு புதன்கிழமை இரவு இரு கன்றுகளை ஈன்றது.

பசு மற்றும் கன்றுகளுடன் கந்தசாமி - உண்ணாமலை தம்பதி.

வழக்கமாக நாட்டுப் பசு, கலப்பின பசு வகையினங்கள் ஒரு கன்று மட்டுமே ஈனும். ஆனால் ஒரே நேரத்தில் இரு கன்றுகளை ஈன்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உண்ணாமலை கூறுகையில், நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், இப்போதுதான் ஒரே நேரத்தில் இரு கன்றுகள் ஈன்றிருப்பதைப் பார்க்கிறேன். காளைக் கன்றும், பெண் கன்றும் நலமாக இருக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT