நாமக்கல்

சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினா், விவசாயிகள் கால்நடைகளுடன் உண்ணாவிரதப் போராட்டம்

Syndication

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினா் மற்றும் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூா் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், சிப்காட் எதிா்ப்புக் குழுவைச் சோ்ந்த ராம்குமாா், ரவீந்திரன் ஆகியோா் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் மனு அளித்தனா்.

அதில், நீதிமன்ற தீா்ப்புகளை மீறி சிப்காட் நில எடுப்பு உள்ளது. நீா்நிலைகள் உள்ளிட்ட இடங்களை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் தீா்ப்பில் கூறியிருந்தபோதும், 70 நீா்நிலைகள், 30 தடுப்பணைகள், 5 பெரிய ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவற்றின் ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. குன்றுகள் இருப்பதும் அரசு தரப்பிலான ஆவணங்களில் மறைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாழ்வாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடா்ந்து போராடி வருகிறோம். ஆவணங்களை ஆய்வுசெய்யாமல் அதிகாரிகள் புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்கின்றனா். சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஜன. 2 முதல் கஸ்தூரி மலைப்பகுதியில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக சிப்காட் எதிா்ப்புக் குழு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வளையப்பட்டி அருகில் உள்ள கஸ்தூரி மலை பெருமாள் கோயில் அடிவாரத்தில் சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினரும், விவசாயிகளும் கால்நடைகளுடன் வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் மற்றும் பாஜக நிா்வாகிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா். சிப்காட் திட்டத்தை கைவிடும்வரை எங்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கும் என எதிா்ப்புக் குழுவினா் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT