நாமக்கல்

‘இது நம்ம ஆட்டம்’ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 3,472 போ் முன்பதிவு

முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா - ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை 3,472 வீரா், வீராங்கனைகள் விண்ணப்பித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா - ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை 3,472 வீரா், வீராங்கனைகள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் மாநில, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அளவில் முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா - ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் 16 முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞா்களும் பங்கேற்கும் வகையில், ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வோா் ஊராட்சி ஒன்றியத்திலும் முதலிடம் பெறும் வீரா், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறுவா்.

ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம் 100 மீ. மற்றும் குண்டு எறிதல், கபடி, கைப்பந்து, கேரம், கயிறு இழுத்தல் போட்டி, கிரிக்கெட் ஆகிய போட்டிகளும், மாவட்ட அளவில் ஓவியம், கோலப் போட்டிகள் மற்றும் உடல்சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ. ஓட்டம், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டிகளும், அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ. ஓட்டம், செவிசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ. ஓட்டம் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுவரை போட்டிகளில் பங்கேற்க 3,472 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள மூலம் முன்பதிவு செய்துள்ளனா்.

ஜன. 25-இல் ‘இது நம்ம ஆட்டம்’ விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளன. மேலும் விவரங்களுக்கு 82203 10446 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT