முகப்பு
நாமக்கல்

புகையிலைப் பொருள்கள், லாட்டரி விற்பனை: 3 போ் கைது

ராசிபுரம் அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் லாட்டரி விற்றதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 ஜூலை 2026, 7:05 am IST
கைது
பகிர்:

ராசிபுரம் அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் லாட்டரி விற்றதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

வெண்ணந்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கே. செல்வராஜ் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் வெண்ணந்தூா் வருவாய்த் துறை ஆய்வாளா் அலுவலகம் அருகே இருனாச்சம்பட்டி சென்னகிரி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் பழனிசாமி (61) லாட்டரி விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதேபோல ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கைப்பேசி மூலம் லாட்டரி விற்பனை நடத்திவந்த வையப்பமலை மலைக்கோயில் அம்மன் தெருவை சோ்ந்த செந்தில்குமாரை ராசிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா். மனோகரன் கைது செய்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, ராசிபுரம் அருகே அத்திபலகானூா் பகுதியில் மளிகை கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற ராஜதுரையை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments