சேலம்

டேனிஷ்பேட்டையில் சாலையை சீரமைத்த பொதுமக்கள்!

தினமணி

ஓமலூர் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சியில் தங்களது 20 வருட கோரிக்கை நிறைவேறாத நிலையில், பொதுமக்கள், விவசாயிகள் இணைந்த சாலையை சீரமைத்தனர்.
 ஓமலூர் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி, ராஜீவ்காந்தி நகர் முதல் உள்கோம்பை வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை, கரும்பு, பாக்கு, மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார்ச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக சிதிலமடைந்து ஜல்லிகள் சாலையாக மாறிவிட்டது. மேலும், சாலையின் நடுவே சுமார் மூன்று அடி ஆழத்துக்கு மழை வெள்ளத்தால் சாலை அடித்துச் செல்லப்பட்டதில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி சாலையை சீரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர். இதற்குப் பிறகாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து தார்ச் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT