சேலம்

ஆத்தூரில் அறிவியல் ரயில் கண்காட்சி: ஒரே நாளில் 25,000 பேர் பார்வையிட்டனர்

தினமணி

ஆத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள அறிவியல் ரயில் கண்காட்சியை 3-ஆம் நாளான திங்கள்கிழமை மட்டும் 25 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
 தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள், தலைமையாசிரியை இரா.தனலட்சுமி, ஆசிரியர் பெ. ராஜாங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்ககும் 80-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
 நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெüரி உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் புவி வெப்பமாதல், தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்ட அறிவியல் படைப்புகள் மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் அடுத்து கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இனிவரும் காலங்கள் அறிவியல் ரயில் நிறுத்தப்படும் இடங்களில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவுப் பொருள்கள் வழங்க ரயில் நிர்வாகமோ, தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT