சேலம்

சேலத்தில் தனியார் ஈமு நிறுவன சொத்துகள் ஏலம்

DIN

கோவையைச் சேர்ந்த குயின் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துகள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவையைச் சேர்ந்த குயின் ஈமு பார்ம்ஸ் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகள் பெற்று, அதனை திருப்பித் தராமல் மோசடி செய்ததால், அரசாணை மூலம் இடைமுடக்கம் செய்யப்பட்ட அதன் அசையா சொத்துகளை பொது ஏலம் மூலம் விற்பனை செய்துத் தர தகுதி பெற்ற அலுவலர் மற்றும் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கோரியதன் பேரில், மேற்படி நிறுவனத்தின் கீழ்கண்ட அசையா சொத்துகள் ஏலம் விடப்படவுள்ளன.
நிறுவனத்தின் அசையா சொத்துகளான மேட்டூர் வட்டம் கொளத்தூர் கிராமத்தில் உள்ள 50 சென்ட் நிலம் மற்றும் 11.438 சென்ட் நிலம் ஆகியவற்றை தகுதி பெற்ற அலுவலர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலரால் வரும் 23-ஆம் தேதி  மாலை 3 மணிக்கு மேட்டூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏல நிபந்தனைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சேலம், சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்குள்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
மேலும், ஏல தேதிக்கு முன்பாக மேட்டூர் வட்டாட்சியர் மூலமாக மேற்படி நிறுவனத்தின் அசையா சொத்தைப் பார்வையிடலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT