சேலம்

தீபாவளி: வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி  பக்தர்கள் வழங்கிய புத்தாடைகளை சுவாமிகளுக்கு அணிவிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள்நடைபெற்றன.
   தீபாவளி பண்டிககையையொட்டி பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவிற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை வெடித்தும், பல்வேறு வகையான இனிப்பு, கார வகைகளை செய்தும் விழாவினை கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து தீபாவளி பண்டிகையையொட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள்கோயில் வளாகத்தில் உள்ள பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி,  தபால் ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு சுவாமிகளின் மூலவர்கள் மற்றும் உத்சவ மூர்த்திகளுக்கு  தீபாவளி பண்டிகை நாளில் அதிகாலையிலேயே சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்கள் வழங்கிய புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தீபாவளி பண்டிகையையொட்டி பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். தீபவாளி பண்டிகைக்காக சுவாமிக்கு கடந்த 50 ஆண்டுகளாக புத்தாடைகள் பக்தர்களால் வழங்கப்பட்டு அந்த உடைகளே சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் பெறுகின்றன என கோயில் அர்ச்சகர் கல்யாணவெங்கட்ரமணன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT