சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 1.80அடி சரிவு

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால்,  அணையின்நீர் மட்டம் 1.80 அடி சரிந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது.  இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,799 கனஅடியாக இருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 97.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் வியாழக்கிழமை காலை 96.05 அடியாக சரிந்தது.
இரு நாள்களில் அணையின் நீர் மட்டம் 1.80 அடி சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 59.84 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT