சேலம்

கிராமங்களில் நுழைந்த யானைகள் வனப் பகுதிக்குள் விரட்டியடிப்பு

தினமணி

மேட்டூர் அருகே கிராமங்களில் நுழைந்த காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.
 தமிழக, கர்நாடக எல்லை வனப் பகுதியில் உள்ளது செட்டிப்பட்டி கிராமம். இப்பகுதிக்குள் வியாழக்கிழமை காலை ஏழு காட்டு யானைகள் புகுந்தன. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனாலும் வனத்துறையினர் வரவில்லையாம். இதையடுத்து கிராமத்தில் ஆண்கள் திரண்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். வியாழக்கிழமை மாலை வரை யானைகள் அங்குள்ள விளைப் பயிர்களைச் சேதப்படுத்தின. ஆனாலும், கிராம மக்களால் யானைகளை விரட்ட முடியவில்லை. பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை யானைகள் கூட்டத்தை பட்டாசுகளை வெடித்து கிராம மக்கள் பாலாறு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT