சேலம்

எடப்பாடி சுற்றுப் பகுதியில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

தினமணி

எடப்பாடி, அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
 கண்ணாரத்தெரு பெரியமாரியம்மன், மேட்டுமாரியம்மன், சின்னமாரியம்மன், பழைய எடப்பாடி சக்தி மாரியம்மன்,
 ஆலச்சம்பாளைம் சக்தி மாரியம்மன், கலர் வெள்ளிபட்டி புதூர் மாரியம்மன், ஓம்காளியம்மன், வெள்ளாண்டிவலசு, பழைய பேட்டை, புதிய பேட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் இத்திருவிழாக்கள் நடைபெற்றன.
 கடந்த 15 நாள்களுக்கு முன்னதாக பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்ட விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூ மிதித்தல், சக்தி கரகம், அக்னி கரக ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடனை பக்தர்கள் வியாழக்கிழமை செலுத்தினர்.
 விழாவில் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT