கஸ்தூரிப்பட்டியில் சிறப்பு மனு நீதி திட்டமுகாம்
சங்ககிரி அருகே உள்ள கஸ்தூரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி அருகே உள்ள கஸ்தூரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டாட்சியர் கே.அருள்குமார் தலைமை வகித்தார்.
8 பேருந்து விபத்தில் ரூ. 6.90 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டா, பட்டா மாறுதல், சிறு குறு விவசாயிகள் சான்று, நத்தம் பட்டா, வாரிசு சான்று உள்ளிட்ட 53 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை சங்ககிரி எம்எல்ஏ ராஜா வழங்கி, அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கிப் பேசினார். பொதுமக்கள் தரப்பில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி 25 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனி வட்டாட்சியர் செம்மலை, வட்ட வழங்கல் அலுவலர் கோவிந்தராஜன், வருவாய்ஆய்வாளர் மேற்கு கவிதா, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.