சேலம்

விமான நிலைய விரிவாக்கத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

DIN

ஓமலூர் அருகே விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.  
ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆனால், காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர்  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்நிலையில், விமான நிலைய நிலத்தை கையகப்படுத்தும் சிறப்பு அதிகாரிகள் குழு நிலம் எடுக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை  தொடங்கினர். தும்பிபாடி கிராமத்தில் பணிகளை தொடக்கிய அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம மக்கள் கூறும்போது, கோவை விமான நிலையம் 120 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. காமலாபுரம் விமான நிலையம் 160 ஏக்கரில் உள்ளது.  அதை முழுமையாக பயன்படுத்தாமல், 570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டாம் என்றும், இங்கு 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களும் வசித்து வருகிறோம். நிலத்தை கையகப்படுத்துவது எங்களை உயிரோடு புதைப்பதற்கு சமம் என்றும், எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழியில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நிலஎடுப்புப் பணிகளை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT