முகப்பு
சேலம்

சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்தைக் கைவிட கோரி மனு

சேலம் -சென்னை பசுமை வழி சாலை திட்டத்தைக் கைவிட கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 15 மே, 2018 at 2:39 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சேலம் -சென்னை பசுமை வழி சாலை திட்டத்தைக் கைவிட கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் குப்பனூர், சின்ன கவுண்டாபுரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில், பசுமை வழி சாலை திட்டத்துக்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகள், விவசாய நிலங்கள், பல்வேறு கட்டுமானங்கள் அழிக்கப்பட உள்ளன.
இதனால் சிறு, குறு விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்பட உள்ளனர். எனவே பசுமை வழி சாலை திட்டத்துக்கு நிலத்தை வழங்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பசுமை வழி சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.