சேலம்

மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

DIN

சேலம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது

இதில் மாவட்டத் தலைவர் கே.ஆர்.செந்தில்வடிவேல் தலைமை தாங்கினார். மருந்து மொத்த வணிகர்கள் சங்கத் தலைவர் ஆர்.முருகேசன், மாவட்டச் செயலர் எம்.கந்தசாமி, பொருளாளர் எஸ்.பழனிசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பி.திருவாசகம் ஆகியோர் பங்கேற்றனர்.
சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், தாரை குழுமத்தின் தலைவருமான தாரை அ.குமரவேலு பேசுகையில், உலகில் வளர்ந்த நாடுகளில் 3 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை சரக்கு சேவை வரிகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 3 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுதான் மத்திய, மாநில அரசு என இரட்டை வரி விதிப்பு முறை உள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12 சதவீத வரி உள்ளது. அதேபோல ஆயுர்வேத மருந்துகளுக்கும் 12 சதவீத வரி உள்ளது. எனவே, உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.
அறக்கட்டளைத் தலைவர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார். இதில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT