சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை நொடிக்கு 1,036 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதியான பாலாறு பகுதியிலும் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 748 கனஅடியிலிருந்து 1,036 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்  அணையின் நீர் மட்டம் 33.69 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 9.07 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT