சேலம்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

DIN


மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்ததால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு இம் மாதம் 5-ஆம் தேதி நொடிக்கு 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. பின்னர், டெல்டா பாசனப் பகுதிகளில் மழை குறைந்ததால், பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் 10-ஆம் தேதி காலை முதல் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.
திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நொடிக்கு 7,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 103.82 அடியாகவும், நீர் இருப்பு 69.88 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT