சேலம்

வீரகனூர் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

DIN


கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்த பகடப்பாடியில் குடிநீர் கேட்டு சாலை மறியல் பொதுமக்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
பகடப்பாடி கிராமத்தில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மேட்டூர் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. இதனால், உள்ளூர் ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் அவ்வப்போது செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த ஆழ்துளைக்கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் முழுமையாக நின்றுவிட்டது.
பாதிப்படைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் மேல் நடவடிக்கை இல்லை என்பதால் வீரகனூர் - பைத்தூர் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வீரகனூர் போலீஸார், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் நிகழ்விடம் வந்து மக்களிடம் பேச்சு நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து,பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT