சேலம்

மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

DIN


ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் கம்பம் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கம்பம் நடும் விழா நடைபெற்றது. விழாவில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் அம்மன், வெள்ளி முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 30-ஆம் தேதி இரவு சக்தி அழைத்தலும், மே 1-ஆம் தேதி பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், ஆடு, கோழி பலியிடுதல், மாலை அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், உருளுதண்டம் போடுதலும், மே 2-ஆம் தேதி வண்டி வேடிக்கை, வாண வேடிக்கையும், மே 3-ஆம் தேதி சத்தாபரணமும் நடை
பெறுகிறது. 
இந்த திருவிழாவில் காமலாபுரம் கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT