சேலம்

பிப்.28-இல் சோனா கல்லூரியில் கலை விழா

DIN


சேலம் சோனா கல்லூரியில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் (சோனா யூத் 19) வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளன. 
இதுதொடர்பாக, சோனா கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கூறியது:
சேலம் சோனா கல்லூரியில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் (சோனா யூத் 19) வரும் பிப்.28 ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளன. 
விழாவில் புகைப்படம் எடுத்தல், பாடல், ஃபேஷன் ஷோ, நடனம் (குழு மற்றும் தனி), குறும்படம் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.  இந்தப் போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்புகள் விடப்பட்டுள்ளன. மாநில அளவில் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேலம் மற்றும் சுற்றுவட்டார கல்லூரிகளில் இருந்து பங்கேற்க உள்ளனர். 
கல்லூரி மாணவர்களின் தனித் திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். 
 இந்தப் போட்டிகளின் இறுதி நிகழ்வில் நடிகர் அருண் விஜய் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளார் என்றார். பேட்டியின் போது ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ்குமார், சரவணபெருமாள், கவியரசு ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT