சேலம்

சேலத்தில் ரூ. 202 கோடியில் 34 புதிய பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டி வைக்கிறார்

DIN

சேலம் நேரு கலையரங்கில் திங்கள்கிழமை (பிப்.25) நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 432.18 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதுதொடர்பாக ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியிருப்பதாவது:
சேலம் போஸ் மைதானம் நேரு கலையரங்கத்தில் திங்கள்கிழமை (பிப். 25) காலை நடைபெறும் விழாவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை வணிகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரம், பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை, மீன்வளத் துறை, தாட்கோ, ஊரக வளர்ச்சித் துறை (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சார்பில் ரூ. 64.73 கோடி மதிப்பிலான 35 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), சமூக நலத் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் கூட்டுறவுத் துறையின் சார்பில் 34 புதிய பணிகள் ரூ. 202.47 கோடி மதிப்பிட்டில் அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 20.22 லட்சம் மதிப்பிலான புதிய வாகனத்தைத் துவக்கி வைத்தும், ஊரக வளர்ச்சி துறை (மகளிர் திட்டம்), வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 43,274 பயனாளிகளுக்கு ரூ.164.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ-க்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT