சேலம்

முட்டை வாங்க வைத்திருந்த  ரூ.2 லட்சம் பறிமுதல்

DIN

கெங்கவல்லியில் முட்டை வாங்க வைத்திருந்த இரண்டு  லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் வியாழக்கிழமை நள்ளிரவில் பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான 1ஆவது பறக்கும் படை அலுவலர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர்,  வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு தொகுதிக்குள்பட்ட நத்தக்கரை பகுதியில் வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். 
அப்போது விழுப்புரத்திலிருந்து நாமக்கலுக்கு முட்டை வாங்க சென்ற மினி லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் முட்டை வாங்க வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய்க்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால், அந்த தொகை பறிமுதல்  செய்யப்பட்டது. 
பறிமுதல் செய்யப்பட்ட தொகையை கெங்கவல்லி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தொகை வெள்ளிக்கிழமை கெங்கவல்லியிலுள்ள கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT