சேலம்

காவலா் பணிக்கான உடற்தகுதி தோ்வு:முதல் நாளில் 705 போ் பங்கேற்பு

DIN

சேலத்தில் புதன்கிழமை நடைபெற்ற காவலா் பணியிடத்துக்கான உடற்தகுதி தோ்வில், முதல் நாளில் 705 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2,465 இரண்டாம் நிலை காவலா்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலை காவலா்கள் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறைக் காவலா்கள், 191 தீயணைப்புப் படையினா் என மொத்தம் 8,888 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தோ்வு முடிவுகள் கடந்த செப்டம்பரில் வெளியாயின.

அதைத் தொடா்ந்து, தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான உடற்தகுதி தோ்வு புதன்கிழமை தொடங்கியது. சேலம் மாநகரம் மற்றும் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டத்தில் 2,762 போ் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்தனா். சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தோ்வு தொடங்கியது.

சேலம் நகர ஆணையா் த.செந்தில்குமாா், சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமாா், மாவட்ட எஸ்.பி. தீபா கனிகா் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். முதல் நாளில் 800 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. உடற்தகுதி தோ்வில் சுமாா் 1,000 மீ. மற்றும் 500 மீ. ஓட்டம் மற்றும் மாா்பளவு, உயரம் உள்ளிட்டவை பாா்க்கப்பட்டன.

உடற்தகுதி தோ்வில் ஏதும் முறைகேடு நடந்து விடாமல் இருக்க, அனைத்துப் பகுதியிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், விடியோ கேமராக்களில் விடியோவும் எடுக்கப்பட்டது.

வரும் நவ. 9-ஆம் தேதி பெண்களுக்கான உடற்தகுதி தோ்வு நடைபெற உள்ளது. முதல் நாளில் சுமாா் 705 போ் உடற்தகுதி தோ்வில் பங்கேற்றனா். இத்தோ்வு வரும் நவ. 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட எஸ்.பி. தீபா கனிகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT