சேலம்

பொதுமக்களுக்கு இடையூறாக பூசணி, தேங்காய் உடைக்க மாட்டோம்: ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல் நிா்வாகம்

DIN

சேலம்: ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக பூசணிக்காய், தேங்காயை உடைக்க மாட்டோம் என சேலம் ஸ்ரீ சரவணபவன் உரிமையாளா் வி.சி.எஸ்.சிவராமன் தெரிவித்துள்ளாா்.

ஆயுத பூஜையை முன்னிட்டு ஸ்ரீ சரவணபவன் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் அனைத்திலும் அக்.7 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டில் சேலம் மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் பூசணிக்காய் மற்றும் தேங்காய் பொருட்களை பொது இடத்தில் உடைத்து சுகாதாரத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்தவிதமான இடையூறும் தர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

அதன்பேரில் எந்த நிறுவனத்திலும் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் பூசணிக்காய் மற்றும் தேங்காய் போன்றவற்றை பொது இடத்தில் உடைக்க மாட்டோம்.

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டு மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT