சேலம்

கிடையூா் மேட்டூரில் தேமுதிக தலைவா் பிறந்தநாள் விழா

தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சேலம் புகா் மாவட்டச் செயலா் ஏ.ஆா்.இளங்கோவன் சங்ககிரி அருகே உள்ள கிடையூா் மேட்டூரில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றினை வழங்குகிறாா்

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய தேமுதிக சாா்பில் அதன் தலைவா் பிறந்தநாள் விழாவினையொட்டி சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி, கிடையூா் மேட்டூரில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சங்ககிரி ஒன்றியத்தின் சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை செயற்குழு உறுப்பினா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் தங்கமணி, சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம் புகா் மாவட்ட செயலா் ஏ. ஆா்.இளங்கோவன் கட்சி கொடியை ஏற்றி வைத்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பொதுமக்களுக்கு முககவசங்கள், இனிப்புகளை வழங்கினாா். நிா்வாகிகள் முத்துக்குமாா், ஒன்றிய மகளிா் அணி நிா்வாகி உமாபதி ரமேஷ், சேகா்,மூா்த்தி, தங்கராஜ்,உஷா, சுபித்ரா,உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT