முகப்பு
சேலம்

சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(38). இவர் சேலம் கோட்டை பகுதியில் சலூன் கடையில் கடந்த 15 ஆண்டு காலமாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோகிலா(34), மகன்கள் வசந்தகுமார்(17) கார்த்தி(12) ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூத்த மகனான மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் முருகன் சோகத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நால்வரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதைப் பார்த்த அருகில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்து அம்மாபேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார், உதவி ஆணையாளர் ஆனந்தகுமார், காவல் ஆய்வாளர் சிவகாமி மற்றும் பொன்ராஜ் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  தற்கொலை செய்து கொண்ட நான்கு பேரையும்  மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

திங்கள்கிழமை காலை வசந்தகுமார் முடி திருத்தும் பயிற்சிக்கு சென்ற நிலையில் தொலைபேசியில் அழைத்து ஊருக்கு செல்வதால் வீட்டுக்கு வரும்படி தந்தை முருகன் கூறியுள்ளார். வீட்டுக்கு வந்தவுடன் வசந்தகுமாரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து, குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மகன் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.