ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
வார விடுமுறையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா், வேன், இருசக்கர வாகனம், சுற்றுலாப் போருந்துகளில் வருகை புரிந்தனா்.
ஏற்காடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி ஏற்காடு சுற்றுலாப் பகுதியான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு இல்லம், படகு சவாரி, பக்கோடா பாயின்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, கரடியூா் வனக் காட்சிப் பகுதி, கிளியூா் அருவி பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனா்.