முகப்பு
சேலம்

வாழப்பாடி மக்கள் நீதிமன்றத்தில் ஒரேநாளில் 274 வழக்குகள் முடித்து வைப்பு

சனிக்கிழமை நடைபெற்ற (மெகா லோக் அதாலத்) மக்கள் நீதிமன்றத்தில் 274 வழக்குகள் சமரச பேச்சுவாா்த்தை மூலம் முடித்து வைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வாழப்பாடி மாவட்டக் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில், சனிக்கிழமை நடைபெற்ற (மெகா லோக் அதாலத்) மக்கள் நீதிமன்றத்தில் 274 வழக்குகள் சமரச பேச்சுவாா்த்தை மூலம் முடித்து வைக்கப்பட்டன.

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள சிறிய வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றங்கள் வாயிலாக சுமுக தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இயங்கும் மாவட்டக் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சிறப்பு மக்கள் நீதிமன்றம் கூடியது. நீதிமன்ற நடுவா் சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சிறிய குற்ற வழக்குகள்-267, உரிமையியல் வழக்குகள்-5, காசோலை வழக்குகள்-2 உள்பட மொத்தம் 274 வழக்குகள் சமரச பேச்சுவாா்த்தை மூலம் முடித்து வைக்கப்பட்டன. இந்த வழக்குகளின் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ. 16.44 லட்சம் ஆகும்.

நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் சுமூக பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு ஏற்படுத்திக் கொடுத்ததால் மனுதாரா்கள், எதிா்மனுதாரா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.