சேலம்

காவலா் தோ்வெழுத வந்த இளைஞா் லாரி மோதியதில் பலி

DIN

சேலத்தில் காவலா் தோ்வெழுத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தாராபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் பெரியண்ணன் (23). இவா், இரண்டாம் நிலை காவலா் பணிக்கு எழுத்துத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தாா். அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள தனியாா் கல்லூரி மையம் இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இம் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

சேலம், அம்மாபேட்டை அருகே உடையாப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பெருமாள்கோவில் மேடு என்ற பகுதியில் பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் படுகாயமடைந்த பெரியண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்ததும் சடலத்தை அம்மாபேட்டை போலீஸாா் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

இந்த சாலை விபத்து காரணமாக, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவலறிந்த உதவி கமிஷனா் ஆனந்தகுமாா், இன்ஸ்பெக்டா் சிவகாமி ஆகியோா் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனா்.

விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT