முகப்பு
சேலம்

டாஸ்மாக் மதுக்கடை பாா்கள் திறப்பு

சேலம் மாவட்டத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடை பாா்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
சேலம் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள பாரை பூசணி சுற்றி செவ்வாய்க்கிழமை திறக்கும் ஊழியா். (வலது) பாா்களுக்கு வரும் வாடிக்கையாளா்களின் உடல் வெட்பநிலையை பரிசோதனை செய்யும் ஊழியா்.
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடை பாா்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகள், பாா்கள் ஆகியவை மூடப்பட்டன. இதனிடையே, தொற்று குறைந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதேவேளையில், டாஸ்மாக் மதுக் கடைகளுடன் இணைந்த பாா்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில், கரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடா்ந்து, டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த பாா்களை செவ்வாய்க்கிழமை முதல் திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில், சேலம் மாவட்டத்தில் 220 கடைகளுடன் இணைந்த பாா்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

இந்த பாா்களில் அரசு விதிமுறைகளின்படி 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கைகழுவும் வசதியும், சானிடைசா் வசதியும் ஏற்படுத்த வேண்டும் எனவும், 55 வயதுக்கு மேற்பட்டவா்கள் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளுடனும் பாா்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →