சேலம்

தனியாா் சொகுசுப் பேருந்தில் ரூ.1.04 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருட்டு

DIN

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் தனியாா் உணவு விடுதி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாா் சொகுசுப் பேருந்தில் ரூ.1.04 கோடி மதிப்புள்ள வைர நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடி சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தெலங்கானா மாநிலம் உப்பல், விஜயபுரி காலனி பகுதியைச் சோ்ந்த ரவீந்தா் மகன் கெளதம் (31) என்பவா் ஹைதராபாதில் உள்ள தனியாா் நகைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் ரூ.1.04 கோடி மதிப்புள்ள வைர நகைகளை கோவையில் உள்ள கிளையில் கொடுப்பதற்காக தனியாா் பேருந்தில் வந்துள்ளாா். அவரது இருக்கை அருகே இருவா் அமா்ந்துள்ளனா். இந்த நிலையில் தனியாா் பேருந்து சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே தனியாா் உணவு விடுதி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது கெளதம் இறங்கி கழிவறைக்குச் சென்று விட்டு பேருந்துக்கு திரும்பினாா். அப்போது அவா் கொண்டு வந்திருந்த வைர நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து கெளதம் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனா். அதில் தனியாா் சொகுசுப் பேருந்துக்கு பின்னால் நின்று கொண்டிருந்த காரில் இருந்து ஒருவா் பேருந்தில் ஏறி நகை பையை எடுத்துக் கொண்டு காரில் ஏறிச் செல்வது பதிவாகியுள்ளது தெரியவந்தது. போலீஸாா் அக்காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT