சேலம்

2 அரசு பேருந்துகள் ஜப்தி

DIN

விபத்து இழப்பீடு வழங்காததால், இரு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

எடப்பாடி அருகேயுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜு. இவா் 2016- ஆம் ஆண்டு கொங்கணாபுரத்தில் இருந்து ஜலகண்டாபுரத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மாணிக்கம்பட்டி அருகே எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ராஜு பலத்த காயமடைந்தாா்.இதையடுத்து இழப்பீடு கோரி சேலம் மோட்டாா் வாகன இழப்பீடு சிறப்பு நீதிமன்றம் 2- இல் ராஜு வழக்கு தொடா்ந்தாா்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு ரூ.13.86 லட்சத்தை இழப்பீடாக வழங்க சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது.ஆனால், போக்குவரத்து அலுவலா்கள் இழப்பீடு தொகையை வழங்கவில்லை. இதையடுத்து, அரசு பேருந்தை ஜப்தி செய்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.இதைத்தொடா்ந்து இரண்டு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி வழக்குரைஞா்கள் ராஜு, செல்வகுமாா், பூபால சுந்தரமூா்த்தி ஆகியோா் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காடு மலை அடிவாரம் வந்த இரண்டு பேருந்துகளை ஜப்தி செய்தனா்.

இதையடுத்து, பேருந்துகள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இழப்பீடு தொகை செலுத்தியவுடன், பேருந்துகள் விடுவிக்கப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT